திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுயநிதி பெண்கள் பிரிவு தமிழாய்வுத் துறை சார்பில் வாசிப்பை நேசிப்போம் என்னும் பொருண்மையில் நடைபெறும் படைப்பரங்க உலகமொழிபெயர்ப்புத் தினம் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழாய்வுத் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் அ.தௌஃபீக் ரமீஸ் கலந்து கொண்டு“மொழிபெயர்ப்புத் தடங்கள்” என்னும் தலைப்பில்சிறப்புரையாற்றினார்.அவர்தம் உரையில் மொழிபெயர்ப்பின் சிறப்புகள் மொழிபெயர்ப்பாளனின் தகுதிகள் மற்றும் மொழிபெயர்ப்பு துறையில் வேலை வாய்ப்புகள் குறித்து மாணவிகளிடையே தெளிவாகஎடுத்துரைத்தார். முன்னதாக பெண்கள் பிரிவு கலைப்புல முதன்மையர் முனைவர் ஏ.மெஹதாப் ஷரீப் தலைமை உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் அ.பரிதா பானு வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி டாக்டர் அ.கா. காஜா நஜிமுதீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது, உதவிச் செயலாளர் முனைவர் கே. அப்துஸ் சமது, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குநர் முனைவர் கே.என். அப்துல் காதர் நிஹால், முதல்வர்முனைவர் டி.ஐ. ஜார்ஜ் அமலரத்தினம், துணை முதல்வர் முனைவர் ஆர்.ஜாஹிர் உசேன், கூடுதல் துணை முதல்வர்கள் முனைவர் ஏ. இஷாக் அகமது,முனைவர் ஏ.ஜே. ஹாஜா மொஹிதீன், செல்வி ஏ பமிதா பானு, விடுதி நிர்வாக இயக்குனர் ஹாஜி முனைவர் கா.ந. முகமது பாசில்,பெண்கள் விடுதி இயக்குநர் செல்வி ஜெ. ஹாஜிரா பாத்திமா, தமிழாய்வுத்துறை தலைவர் மற்றும் தேர்வு நெறியாளர் முனைவர்அ.சையது ஜாகீர் ஹசன் , பெண்கள் பிரிவு பொறுப்பாளர் மற்றும் பகுதி 5 பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.ஹ.ஜஹானாரா மற்றும் துறை சார்ந்த பேராசிரியைகள்,மாணவிகள்கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் உதவிப் பேராசிரியை முனைவர் மு.அலிபி நிஷா நன்றி கூறினார்.