திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு அரபுத் துறையில் உலக அரபிக் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை புதுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் அரபுத் துறைத் தலைவர் முனைவர் அப்துல் மாலிக் கலந்துகொண்டு அரபிக் மொழியில் தேர்ச்சி எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில் அரபிக்மொழியின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவிகளிடையே எடுத்துரைத்தார். முன்னதாக துறைப்
பொறுப்பாளர் முனைவர் முகமது இப்ராஹிம் தலைமை உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஹாஜிடாக்டர் அ.கா. காஜா நஜிமுதீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது, உதவிச் செயலாளர் முனைவர் கே. அப்துஸ் சமது, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குநர் முனைவர் கே.என். அப்துல் காதர் நிஹால், முதல்வர் முனைவர் டி.ஐ. ஜார்ஜ் அமலரத்தினம், துணை முதல்வர் முனைவர் ஆர். ஜாஹிர் உசேன்,கூடுதல் துணை முதல்வர்கள் முனைவர் ஏ. இஷாக் அகமது,முனைவர் ஏ.ஜே. ஹாஜா மொஹிதீன், செல்வி ஏ.பமிதா பானு, விடுதி நிர்வாக இயக்குனர் ஹாஜி முனைவர் கா.ந. முகமது பாசில்,பெண்கள் விடுதி இயக்குநர் செல்வி ஜெ. ஹாஜிரா பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.