மகளிர் டி20 உலகக்கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!

- Advertisement -

0

9வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதற்கான இந்திய அணி 15 பேர் கொண்ட  வீராங்கனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி வீராங்கனைகள்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்திராகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், மற்றும் சஜனா சஜீவன். கூடுதல் வீராங்கனைகள் – உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), தனுஜா கன்வர் மற்றும் சைமா தாகூர்.இதுவரை இந்திய மகளிர் அணி ஒரு முறை கூட டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. இந்த முறை இந்திய அணி பலமாக இருக்கும் நிலையில் உலகக் கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளது.

இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா அதிரடி ஆட்டம் ஆடி வருகின்றனர். இவர்களின் ஆட்டமே ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.அடுத்து மிடில் ஆர்டரில் தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் களமிறங்குவார்கள். பவுலிங்கில் ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பூஜா வஸ்திராகர் ஆல் – ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சுழற் பந்துவீச்சாளர்களாக சுழற் பந்துவீச்சாளர்களாக ஷோபனா மற்றும் ஹேமலதா அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.