தமிழக வெற்றிக் கழகம் கொடியை நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்: பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு.!

- Advertisement -

0

திரை உலகில் கொடி கட்டி பறக்கும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ம் தேதி (02.02) தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்தார். முதல் மாநாடு செப்டம்பர் 22 ம் தேதிக்கு தயாராகி வரும் அவர் அதற்கு முன்பாக, நாளை கட்சியின் கொடியை கட்சி கொடியையும் ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகம் செய்கிறார்.இந்நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 7 மணிக்கு மேல் தொடங்கவுள்ளது. காலை 11 மணிக்குள்ளாக கட்சியின் கொடியை ஏற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

கொடி அறிமுக விழாவில் கட்சியின் மாவட்ட தலைவர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். நீலாங்கரை இல்லத்திலிருந்து பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இதையொட்டி பாதுகாப்பு வழங்க கோரி நீலாங்கரை காவல் நிலையத்திலும், கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும் கட்சி அலுவலகத்திற்கும் பாதுகாப்பு கேட்டு கானத்தூர் காவல் நிலையத்திலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.