சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகையை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

- Advertisement -

0

திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ராசி மஹாலில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.ஹைதர் அலி தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தும் போது எதிர்க்கட்சிகள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும். மாறாக வெளிநடப்பு செய்யக்கூடாது என்றும்,காவல் நிலையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கு பலருக்கு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக போராடியவர்களுக்கு வழக்கு இருப்பதால் சான்றிதழ் தர மறுக்கின்றனர். தமிழக அரசு குடியுரிமை திருத்த சட்ட மசோதா எதிராக போராட்டகாரர்களை மீது பதிந்த அனைத்து வழக்கையும் ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், காவல் துறைக்கு தமிழக அரசு ரத்து செய்யப்பட்டதாக அரசாணையை அனுப்பிட வேண்டுமென்றும், ஓரே நாடு, ஓரே தேர்தல் என்ற நடைமுறையை ஒன்றிய அரசு கைவிட வேண்டுமென்றும், தமிழகத்தில் 1 முதல் 5 வரை உள்ள உருது பாட திட்டத்தை 12 ம் வகுப்பு வரை மேம்படுத்த வேண்டும். உருது ஆசிரியர்களை அதிக அளவில் நியமிக்க வேண்டுமென்றும், திமுக, அதிமுக கட்சிகள் உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லீம்களை அதிக அளவில் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகையை முற்றிலும் புறக்கணித்த ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும், மாநிலம் முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என கூட்டத்தின் வாயிலாக பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.
இந்த செயற் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் திருப்பூர் ஹாலிதீன், மாநில பொருளாளர்செய்யாறு அப்பாஸ், மாநிலத் துணைத் தலைவர் முசாஹூதீன், மாநிலச் செயலாளர்கள் மதுரை சிக்கந்தர், கயத்தாறு பீரப்பா, திண்டுக்கல் ஜமால் முகமது, ராமநாதபுரம் அன்வர் அலி, மதுக்கூர் ஜபருல்லா, அப்துல் ஹாலிக்
மாநில இளைஞரணி செயலாளர் யாசிர் மற்றும் மாநில அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழா முடிவில் திருச்சி மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஜாகிர் உசேன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.