திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா:மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது பங்கேற்பு!
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருச்சி கிழக்கு மாநகரத்தில் 47 நிகழ்வு வரிசையில் முதல் நிகழ்வாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடை பெற்றது.நிகழ்வில் மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா வரவேற்புரை நிகழ்த்தினார். மாநகராட்சி துணை மேயர் திவ்யா தலைமை தாங்கினார்.மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கி சிறப்புரை ஆற்றினார் . இந்நிகழ்வில் கிழக்கு மாநகரச் செயலாளரும் மண்டல குழு தலைவருமான மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் ராஜ் முஹம்மது , வட்டக் கழகச் செயலாளர் சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக நன்றியுரை துவரங்குறிச்சி பேரூராட்சி மன்ற தலைவர் சரண்யா. நிகழ்த்தினார்.