கலைஞர் ஆர்மி என்ற ஒரு அணியை உருவாக்க உதயநிதி ஸ்டாலின் பரிந்துரை:அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்!
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற பொது தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற இலக்கை நோக்கி திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர கழகத்தின் சார்பாக, இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று 02.09.2024 திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமை உரை ஆற்றினார்.கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.
மாண்புமிகு,கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பெரும் முயற்சியால் உலகத்தரம் வாய்ந்த கார் ரேஸ் பந்தயம் (Formula 4) சென்னையில் நடத்திட பெரும் முயற்சி எடுத்து நடத்தி காட்டியமைக்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கலைஞர் ஆர்மி என்ற ஒரு அணியை உருவாக்கி உள்ளோம், இந்த பெயரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் பரிந்துரைத்தார்.நடிகர் நடித்த படங்கள் பெயரை கேட்டால் சரியாக சொல்லும் இளைஞர்கள் தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெயர் கேட்டால் தெரியாது.அதனை நாம் தான் பயில்விக்க வேண்டும்.அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரத்தை வழங்கி விட்டோம் என்றால் 234 தொகுதிக்கு 234 தொகுதி வெற்றி பெற்று விடுவோம் என கூறினார்.
கூட்டத்தில் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், தர்மராஜ் ,மோகன் பாபு, ராஜ்முகமது, விஜயகுமார் ,மணிவேல், சிவக்குமார், மாநகர கழக நிர்வாகிகள் நூர்கான், தமிழ்ச்செல்வன், சந்திரமோகன், பொன்செல்லையா ,சரோஜினி,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாரிகண்ணன்,மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு ,பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட, கழக செயலாளர்கள்- நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.