திருச்சி வெஸ்டிரி பள்ளி மைதானத்தில் அதிக அரங்குகள் கொண்ட புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி தொடக்கம்..!
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில், மக்களிடையே நூல்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப்குமார் தலைமையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து புத்தகக் கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார். இக்கண்காட்சியில் தமிழக முழுவதும் உள்ள புத்தக பதிப்பகத்தினர்,விற்பனையாளர்கள் கலந்து கொண்டு லட்சக்கணக்கான புத்தகங்களை விற்பனைக்கும்,பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளன. புத்தக கண்காட் சியின் தொடக்க நாளான இன்று பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவரின் நடத்திய வீரமங்கை ராணி மங்கம்மாள் குறித்த நாடகம் நடைபெற்றது. மேலும் கலைக் காவிரி நுண்கலைகல்லூரி ஆடல் சங்கமம் நடைபெற்றது.பறவைகள் பலவிதம் என்ற தலைப்பில் பாரதி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் பாலா பாரதி பறவைகள் குறித்த மாணவர்களுக்கான நிகழ்ச்சியும், கல்லூரிமற்றும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன.
கண்காட்சியில் தமிழக வரலாற்றில் பெண்கள் என்ற தலைப்பில் தினமும் மாலையில் கருத்தரங்கம், கவியரங்கம், மாணவர் உரை, இளையோர் அரங்கம், நாடகம் பாராட்டு விழா போன்ற பல்வேறு சுவை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. கண்காட்சியை பொதுமக்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பார்வையிட்டு மாலை நேர நிகழ்ச்சியும் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி,மண்டலத்தலைவர் மதிவாணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, முதுநிலை மண்டல மேலாளர் (டாஸ்மாக்) செந்தில்குமாரி, வருவாய் கோட்டாட்சியர்கள் அருள்,தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அதியமான் கவியரசு, கவிஞர் நந்தலாலா, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சீனிவாசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பதிப்பகத்தார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.