எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் 2 செ.மீ கட்டியை அகற்றிய சாதனை படைத்த திருச்சி ஸ்வேதா மருத்துவமனை மருத்துவர்!
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி சேர்ந்த 37 வயதுடையவருக்கு சப்மியூகோஷல் கட்டி லியோமி யோமா என்னும் உணவுக் குழாய் கட்டினால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு தீர்வாக தொரகாட்டமி எனப்படும் நெஞ்சை திறந்து உணவு குழாயில் நீ கட்டிய அகற்றப்படும் என ஒரு சில மருத்துவமனையில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் இப்பிரச்சனைக்கு எண்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்து கட்டிய அகற்ற முடியும் என்பதை உறவினர்கள் மூலம் அறிந்து கொண்ட அவர் திருச்சியில் உள்ள சுவேதா மருத்துவமனை முதன்மை மருத்துவர் செந்தூரனைஅணுகினார்.மருத்துவரான செந்தூரன் இந்தியாவிலேயே எண்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களில் இவர் ஒருவர்.
இதுபோன்ற சவாலான மற்றும் புதிய சிகிச்சை முறைகளில் அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றி இரைப்பை குடல் மற்றும் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணரும், டாக்டருமான செந்தூரன்கூறுகையில் எண்டோஸ்கோப்பி மூலம் உணவு குழாயில் இருந்த 2 சென்டிமீட்டர் கட்டி முழுவதும் அகற்றப்பட்டது. இதனால் நெஞ்சை திறந்து செய்ய வேண்டிய மாபெரும் அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டது. இந்த மூலம் சிகிச்சை செய்வதினால் தழும்பு இல்லாமல் வலி இல்லாமல் அடுத்த நாளே அவர் வீட்டிற்கு திரும்பினார். அவரும் தினமும் செய்யும் வேலையை தொடங்கினார் என்று கூறினார்.எங்கள் ஸ்வேதா மருத்துவமனை திருச்சி தில்லைநகரில் செயல்பட்டு வருகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு இந்நேரமும் எங்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார். தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னையில் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.