தவெக மாநாட்டிற்கு சென்ற திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட இருவர் சாலை விபத்தில் உயிரிழப்பு!
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து கட்சி தொண்டர்கள் சென்றுள்ளனர். தற்போது தவெக கழகத்தின் திருச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவரும், வழக்கறிஞருமான சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த கார் சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி தல குப்புற கவிழ்ந்தது. பயணித்த7 நபர்களில் இரண்டு நபர்கள் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஸ்ரீனிவாசன் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் கட்சி ஆரம்பித்தில் இருந்து கட்சிப் பணியில் தீவிரமாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.