திருச்சி மாநகராட்சி சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி வரும் 30 ம் தேதி தொடக்கம்!

- Advertisement -

0

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கண்டறிந்து வியாபாரிகள் எவ்வாறு செய்யும் இடத்திற்கு சென்று கூடுதல் கணக்கெடுப்பு பணி செய்யப்பட்டது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட 989 வியாபாரிகள் கணக்கெடுப்பு பணிகள் அனைத்தும் தற்போது முடிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட 6220 சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியல் விவரங்கள் வார்டு குழு அலுவலக வாரியாக சாலை வியாபாரிகள் பார்வையிடுவதற்கு ஏதுவாக மாநகராட்சியின் அனைத்து வாடு குழு அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் பிழை திருத்தம் அல்லது நீக்கம் செய்ய விரும்பும் வியாபாரிகள் நவம்பர் 30 தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை அந்தந்த வார்டு குழு அலுவலக உதவி ஆணையரிடம் உரிய சான்று மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.