திருச்சி மாநகராட்சி 38 வது வார்டில் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய குளத்தை சீரமைக்க எஸ்டிபிஐ கோரிக்கை!

- Advertisement -

0

திருச்சி மாநகராட்சி 38 வது வார்டு கே வி கே சாமி தெருவில் உள்ள மாசு படிந்த பொது மக்களுக்கு கேடு விளைவிக்க கூடிய சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய குளத்தை அதில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டுமாய் எஸ்டிபிஐ கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் பகுதி சபா கூட்டத்தின் வாயிலாக திருச்சி மாநகராட்சியை கேட்டுக் கொள்கிறோம்.

- Advertisement -

பகுதி சபா கூட்டத்தில் உதவி வருவாய் அதிகாரி ராஜதுரை மற்றும் விஜயகுமார் ஆகியோரிடம் மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் எஸ் எஸ் ரஹமத்துல்லா மனு அளித்தார்.அருகில் தொகுதி செயலாளர் அப்பாஸ் மந்திரி, தொகுதி இணைச் செயலாளர் சிராஜுதீன், பொருளாளர் சாதிக் , 38வது வார்டு கிளை தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், செயலாளர் மைதீன், துணைத் தலைவர் பஷீர் நூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.