1971 ம் ஆண்டு இரும்பு பெண்மணி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, வங்கதேசத்தின் விடுதலைக்கு வழிவகுத்த இந்தியா- பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான நமது ராணுவத்தின் வெற்றியை நினைவுகூறும் வகையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோவிந்தராஜன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் ராணுவத்தினர் துறை மாநில தலைவர் ராஜசேகரன் போரில் ஈடுபட்ட வாரண்ட் ஆபிசர்கள் ராமதாஸ் மற்றும் காலமேகம் ஆகியோரை கௌரவித்தார்.
நிகழ்வில் வேதராஜன், ஜோசப், ஸ்வாமிநாதன், அஜீம்,ராகவேந்திரன்,கிளமென்ட்,மகேஷ், அன்பில் ராஜேந்திரன், எழிலரசன், வளன்ரோஸ் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.