திருச்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பரிந்துரைப்படி மலைக்கோட்டை பகுதி கழக சார்பில் வளர்ச்சி பணி மற்றும் மக்கள் பணி குறித்தும் கழக செயல்வீரர்கள் மாபெரும் ஆலோசனை கூட்டம் பகுதிச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு 2026 நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மக்களிடம் வாக்குகள் பெற எப்படி செயல்பட வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார்.அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், அம்மா பேரவையின் செயலாளர் ஆவின் கார்த்திக், கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, மற்றும் மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, துணைச் செயலாளர் இந்திரா, தலைவி தேன்மொழி, மகளிரணி செயலாளர் நசீமா பாரிக்,இணைச்செயலாளர் டாஸ்மார்க் பேட்டோ மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.