திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது!

- Advertisement -

0

திருச்சி மகாத்மா கண் மருத்துவமனையில் இலவச நீரிழிவு விழித்திரை பரிசோதனை முகாம் நவம்பர் 11 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்று வந்தன.முகாமில் ரூபாய் 3000 மதிப்புள்ள கண்ணுக்கு தேவையான பரிசோதனைக்கு சிறப்பு சலுகையாக ரூ 1200/-க்கும் மற்றும் மருத்துவ நிபுணர்களின் இலவச ஆலோசனைகளையும் வழங்கப்பட்டன. தொடர்ந்து இன்று வெஸ்டரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் டாக்டர் அனுகிரஹா தலைமையில் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற் பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.