500க்கும் மேற்பட்ட எலக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிசிச்சைகள் செய்து முடித்த திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை சாதனை!
திருச்சி காவிரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை மிக குறைந்த காலத்தில் எலக்ட்ரோ பிசியாலிஜிகல் சிகிச்சைகளை செய்து முடித்து 3 ஆண்டுகளில் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறியதாவது,எலக்ட்ரோ பிசியாலிஜிகல்(EP) என்பது இதய சிகிச்சை பிரிவில் தனி சிறப்பாக நோயாளர்களின் சீரற்ற இதயத்துடிப்பு கோளாறுகளை கண்டறிந்து கையாள உதவுகிறது. இதய நோயாளிகள் ஒரு EP ஆய்வகத்தில் தங்களின் சோதனைக்கு உட்படுத்தி உபாதைகளை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளலாம். உயரிய அதிநவீன 3D தொழில்நுட்ப வசதிகள் கொண்ட எலக்ட்ரோ பிசியாலிஜிகல்(EP LAB) ஆய்வகம் முதல் முறையாக 2021 இல் காவேரி ஹாட் சிட்டி மருத்துவமனில் துவங்கப்பட்டது .
கடந்த மூன்று ஆண்டுகளில் 500க்கும் சீரற்ற இதயத் துடிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் நோயாளிகளும் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். 2023 ல் மாநிலத்தின் முதல்முறையாக பிரத்யேக குழந்தை நலப் பிரிவு நிறுவப்பட்டது.
இதுகுறித்து செயல் இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது, காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் தொடர்ந்து உலக தரமான நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருவதில் முன்னோடியாக திகழ்கிறது. எலக்ட்ரோ பிசியாலஜி துறையில் எங்களின் சேவை நோயாளிகளுக்கு பயன் அளிப்பது மட்டுமல்லாமல் எங்கள் மருத்துமனையில் எலக்ட்ரோ பிஸியாலஜியில் FNB பாடத்திட்டத்தை துவங்குவதற்கு தேசிய தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ளது.இந்திய நாட்டில் எலக்ட்ரோ பிசியாலஜி சூப்பர் ஸ்பெஷாலிஸ்டி கல்வியை தொடங்க அங்கீகாரம் பெற்ற சில கார்ப்பரேட் மருத்துவமனையில் எங்கள் மருத்துவமனையும் என்று கூறினார். இந்த சந்திப்பில் முதுநிலை பொது மேலாளர் மாதவன், துணை மருத்துவ நிர்வாகி கோகுல கிருஷ்ணன், முதுநிலை பொது மேலாளர் ( இயக்குதல்) ஆண்ட்ரூஸ் நித்யா தாஸ் உடனிருந்தனர்.