கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான  வாலிபால்  போட்டியில் முதலிடம் பிடித்த திருச்சி ஜமால் முகமது கல்லூரி!

- Advertisement -

0

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுகை, கரூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான வாலிபால்  போட்டி நாக்-அவுட் முறையில் தஞ்சை, கரந்தை டி யூ கே கலை கல்லூரியில் நடைபெற்றது.16 கல்லூரி அணிகள் பங்கு பெற்ற வாலிபால் இறுதி போட்டியில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியை 25-22, 21-25, 25-22. என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலானமாணவியர்களுக்கான வாலிபால்  போட்டியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.

- Advertisement -

மூன்றாம் இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக துறைகள் அணி, குடந்தை, இதயா மகளிர் கலலூரியை 25-11, 25-12.என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாம் இடம் பிடித்தது.வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ஜமால் முகமது கல்லூரி வீரர்களை கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே. காஜா நஜீமுதீன், முதல்வர், டி. ஐ. ஜார்ஜ் அமலரத்தினம், கௌரவ இயக்குனர் கே. என். அப்துல் காதர் நிஹால் உடற்கல்வி இயக்குனர் பி.எஸ். ஷா இன் ஷா ஆகியோர் பாராட்டினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.