திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு …
திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி அப்பல்லோ மருத்துவமனையின் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் உமா வேல்முருகன் கலந்துகொண்டு “மகளிர் ஆரோக்கியம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். உரையில் பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியமானது அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு வழி செய்கிறது எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி பெண்களுக்கு ஏற்படும் பத்து வகையான நோய்கள் பற்றியும் அதற்கான தீர்வுகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார். முன்னதாக துறைத் தலைவர் முனைவர் எம்.கௌஸ் பாஷா வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி டாக்டர் அ.கா. காஜா நஜிமுதீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது,
உதவிச் செயலாளர் முனைவர் கே. அப்துஸ் சமது, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குநர் முனைவர் கே.என். அப்துல் காதர் நிஹால், துணை முதல்வர் முனைவர் ஆர். ஜாஹிர் உசேன், கூடுதல் துணை முதல்வர்கள் முனைவர் ஏ. இஷாக் அகமது, முனைவர் ஏ.ஜே. ஹாஜா மொஹிதீன், செல்வி ஏ.பமிதாபானு,விடுதி நிர்வாக இயக்குனர் ஹாஜி முனைவர் கா.ந. முகமது பாசில், பெண்கள் விடுதி இயக்குநர் செல்வி ஜெ. ஹாஜிரா பாத்திமா, துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.இறுதியாக உதவிப் பேராசிரியை செல்வி கே.பிரியதர்ஷினி நன்றி
கூறினார்.