திருச்சி மாவட்டத்தில் உள்ள மகளிருக்கு அவ்வையார் விருது பெற அழைப்பு:கலெக்டர் பிரதீப்குமார் அறிவிப்பு!

- Advertisement -

0

சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மகளிர் தின விழாவின் போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும். பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுபவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வருகிற 2025-ம் ஆண்டு அவ்வையார் விருது பெற தமிழக அரசின் விருதுகள்https://award.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

- Advertisement -

இந்த விருது பெற தகுதிகளான தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கான இந்த சமூக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இந்த விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விருது பெற விண்ணப்பிக்க வருகிற      31-ந்தேதி கடைசி நாளாகும். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.