திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் `குரூப் – 2′ முதன்மை தேர்வுக்கு முழுநேர இலவச பயிற்சி வகுப்பு….
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் – 2 தேர்வுக்கு 507, குரூப் – 2ஏ தேர்வுக்கு 1,820 என மொத்தம் 2,327 காலி பணியிடங்க–ளுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 14-ந்தேதி முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு கடந்த அக்டோபர் 14-ந்தேதி முதல் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 வரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 12-ந்தேதி முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதனால் முதன்மை தேர்வுக்காக வருகிற 23-ந்தேதி முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முழுநேர வகுப்புகள் நடைபெற உள்ளது. மேலும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து போட்டித்தேர்வர்களும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.