இந்தியாவின் ஐக்கிய நாடுகளுக்கான சர்வதேச இயக்கம் சார்பாக இரண்டு நாள் நிகழ்ச்சியாக திருச்சியில் உள்ள கேர் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சியில் இருந்து பல்வேறு பள்ளியிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தலைப்பாக இந்திய அரசியலமைப்பு, மனித உரிமைகள், இயற்கை மாற்றங்கள், இந்திய பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் மேலும் நிகழ்ச்சி அமைப்பாளர் பரவ் கிருமாவாத் நினைவு பரிசு வழங்கினார்.