திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுருள் பாசி தயாரித்தல் மற்றும் மதிப்புக்கூட்டல் பற்றிய பயிற்சி பட்டறை…!
திருச்சி ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி), தாவரவியல் துறையால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மக்களுக்கு சுருள்பாசி வளர்ப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு தமிழக அரசின் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி அளித்தன. மேற்கூறிய பிரிவைச் சேர்ந்த 31 பெண் பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சி யில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிர் துறை பேராசிரியர் மற்றும் நுண்ணுயிரிகளுக்கான தேசிய களஞ்சியத்தின் இயக்குநர் டாக்டர் ஜி. முரளிதரன், சுருள்பாசி சாகுபடி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து, கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி முனைவர் அ.கா.காஜா நசீமுதீன், ஹாஜி. எம் ஜே ஜமால் முகமது, பொருளாளர், முனைவர் க அப்துஸ் சமத், உதவி செயலாளர், முனைவர் கா.ந. அப்துல் காதர் நிஹால், உறுப்பினர் மற்றும் கவுரவ இயக்குநர் முன்னிலையில் சிறப்புரை நிகழ்த்தினார். முனைவர் து இ ஜார்ஜ் அமலரேத்தினம், முதல்வர் விழாவிற்குதலைமையுரை நிகழ்த்தினார்.
தூத்துக்குடியை சேர்ந்த சுருள்பாசி சாகுபடி பயிற்சியாளர் சு. குருசாமி சுருள்பாசி சாகுபடி மற்றும் அறுவடை முறைகளை செய்முறை பயிற்சி மூலம் விளக்கினார். ஜமால் முகமது கல்லூரியின் தாவரவியல் உதவி பேராசிரியர் முனைவர் கா. முகமது ரபி மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் உதவி பேராசிரியர் முனைவர் வி. கவிதா ஸ்குவாஷ், பிஸ்கட்டுகள், கேக்குகள் மற்றும் சோப்புகள் போன்ற சுருள்பாசி மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் குறித்து பயிற்சி அளித்தனர்.கிரியா அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கே. சிவபாலன், சுருள்பாசி தொழில் முனைவோர் குறித்து விளக்கினார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் மேலாண்மைத் துறையின் பேராசிரியர் முனைவர் என். டி. ஸ்ரீநிதிவிஹாஷினி பெண்கள் தொழில்முனைவோரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தாவரவியல் துறையின் தலைவர் முனைவர்உ. சையத் ஜஹாங்கிர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளரும் தாவரவியல் உதவி பேராசிரியருமான
முனைவர் கா. முகமது ரபி ஆகியோர் இந்த திட்டம் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு,குறிப்பாக பெண்களுக்கு பயனளிக்கும் என்றும், சுருள்பாசி சாகுபடி மூலம் அவர்களின் வாழ்வாதாரமேம்பாட்டிற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதோடு, அதன் மதிப்பு கூட்டப்பட்டதயாரிப்புகளை சந்தைப் படுத்துவதன் மூலமும் இந்த திட்டம் மென்மேலும் மேம்படையும் என்றும் விளக்கி கூறினார்.