சுரண்டையில் வணிகர்கள் சங்க தலைவர் வெள்ளையன் மறைவிற்கு வியாபாரிகள் அஞ்சலி!

- Advertisement -

0

சுரண்டையில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு, அனைத்து வியாபாரிகள் சங்கம், காமராஜர் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், வத்தல் வியாபாரிகள் சங்கம், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், சார்பில் மறைந்த தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த. வெள்ளையன் மறைவை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ் தலைமை வகித்தார்.

- Advertisement -

மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சேர்மசெல்வம், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகி நடராஜன், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்ஏ துரை,மகாத்மா காந்தி பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் கௌரவ ஆலோசகர் எஸ்வி பழனிச்சாமி, செயலாளர் ஏடி. நடராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார், துணை செயலாளர் எஸ்கேடி துரைமுருகன், செய்தி தொடர்பாளர் ராஜகுமார் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர்,பொருளாளர் தனபால், துணை தலைவர் சிவசக்தி முத்தையா, பஷீர் முகமது, வெர்ஜில் ராஜ், கிருபாகரன் , ஜெயபிரகாஷ், நாராயணா ரமேஷ், வாட்டர் மாரியப்பன், சுந்தரேசன், சரத் மாடசாமி, ஆலன் பால், சாம் செல்வகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.