வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க திருத்தம் முகாம்: தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி!
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கும் முறை திருத்தம் முகாம் நாளை முதல் நடைபெற உள்ளது. வாக்காளரை பதிவு செய்ய வாய்ப்புகள் அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.நாளை 16 -11 -2024 மற்றும் 17 -11 -20 24 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் 23-11- 2024 சனிக்கிழமை 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் பொதுமக்கள் எங்கு வாக்களித்தார்களோ அந்த வாக்குச்சாவடி மையத்தில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றுதல், புகைப்படம் மாற்றுதல் மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் ஆகிய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அதனை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளியிலிருந்து கடைவீதி வழியாக பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திருவெறும்பூர் வட்டாட்சியர் ஜெயப்பிரகாசம் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி தேர்தல் ஆணையம் டெப்டி தாசில்தார் கீதா ஏற்பாட்டில் திருவெறும்பூரில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் முக்குலத்தோர் பள்ளியில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இந்த விழிப்புணர்வு பேரணிகள் கலந்து கொண்டனர்.