தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ,மேற்கு மாவட்டம் இனாம் குளத்தூர் ஊராட்சி கிளை சார்பில் அனைத்து சமூக மக்களுக்கான 211 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க பொது கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் ஹுமாயூன் கபீர் தலைமை தாங்கினார். கிளை தலைவர் அபுல் ஹசன் வரவேற்புரையாற்றினார்.தமுமுக மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC, கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா, மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் சமது, அப்துர் ரஹ்மான், மருத்துவ சேவை அணி மண்டல செயலாளர் தல்ஹா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பொதுகூட்டத்தில் உரையாற்றிய கழக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், கடந்த 30 ஆண்டுகளாக தமுமுக தமிழகத்தில் நிகழ்த்திய சாதனைகளை அதனால் சமூகம் பெற்ற பயன்கள் குறித்தும் இந்த இயக்கத்தின் வெற்றிகாக பணியாற்றி கொண்டு இருக்கும் நிர்வாகிகளுக்கும் மறைந்த நிர்வாகிகளுக்கும் கழகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்தார்.மமக பொது செயலாளர் அப்துல் சமது MLA, தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் தமுமுக வின் 30 ஆண்டு சேவைகளை எல்லாம் வல்ல இறைவனிடம் நன்மையை பெருக்க மேற் கொள்ளும் பணிகள் என உரையாற்றினர்.IIP மாநில துணை செயலாளர் முகமது ரபீக், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் விருதை ஜாக்கீர், SMI மாநில துணை செயலாளர் அப்பீஸ் கான் ஆகியோர் மருத்து சேவையில் தமுமுக மேற்கொள்ளும் பணிகளை எடுத்துரைத்தனர்.பொது கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர், அம்மாபேட்டை தேவலாய பங்கு தந்தை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு கழக தலைவர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மமக மேற்கு மாவட்ட துணை செயலாளர் இம்ரான், அசாருதீன் அப்துல் சமது உள்ளிட்ட மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.இறுதியாக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முபாரக் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் மணிகண்டம் ஒன்றியம், இனாம் குளத்தூர், ஆவாரங்காடு நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.