திருச்செந்தூர் – நெல்லை பயணிகள் ரயில் 5 நாட்களுக்கு ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

- Advertisement -

0

பராமரிப்பு பணிகள் மற்றும் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக திருச்செந்தூர் – நெல்லை பயணிகள் ரயில் 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்செந்தூர்-நெல்லை இடையே தினமும் பயணிகள் ரயில் (வண்டி எண் 06674/06409) இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக இந்த ரயில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.இதே போன்று திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 8.25 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மண்டலத்தில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 6, 8, 10-ந் தேதிகளில் இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.