துவாக்குடி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ததால் பரபரப்பு!

- Advertisement -

0

திருவெறும்பூர் அருகே உள்ள அரசு ஐடிஐ மற்றும் துவாக்குடி அரசு கலைக் கல்லூரி முன்பு உள்ள அரசு மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வைரவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. துவாக்குடி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை துவாக்குடி போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருவெறும்பூர் அருகேஉள்ள ஐடிஐ மற்றும் துவாக்குடி அரசு கலை கல்லூரியில் முன்பு உள்ள அரசு மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி இந்திய மாணவர் சங்க சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.இந்நிலையில் டாஸ்மார்க் நிர்வாகம் செவி சாய்க்காத நிலையில் இன்று காலை 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் அழைப்பு விடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுக்கு துவாக்குடி போலீசார் அனுமதி மறுத்ததோடு சம்பவ இடத்திற்கு துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் திருச்சிய அரசு மதுபான கடை மேலாளர் விஜய் சண்முகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

- Advertisement -

இந்திய மாணவர் சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் ஜி.கே. மோகன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரவீன், மாவட்ட செயலாளர் ஆமோஸ், மாவட்ட குழு உறுப்பினர் அர்ஜுன், ராஜேஷ் கிளைச் செயலாளர் துளசிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்பொழுது பேச்சு வார்த்தையில் விஜய் சண்முகம் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவில் தள்ளி அரசு மதுபானம் கடை வைக்க வேண்டும் என்பது விதி ஆகும்.இது கிராமப்புறத்தில் 100 மீட்டர் ஆக உள்ளது. அதன்படி நாங்கள் 50 மீட்டர் தள்ளிதான் அரசு மதுபான கடைகளை நடத்தி வருகிறோம் இருந்தாலும் மாணவர்களின் நலம் கருதி இந்த அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக கூறினர்.அதற்கு மாணவர் தரப்பில் எவ்வளவு காலம் அவகாசம் ஆகும் என்பதை குறிப்பிட வேண்டும் என கேட்பதற்கு அதற்கு விஜய் சண்முகம் மறுத்துவிட்டார். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மாணவர்கள் துவாக்குடி அரசு கலை கல்லூரி வளாகத்திற்கு உள்ளே அமர்ந்து அரசு எதிராகவும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்ஸ்பெக்டர்  ஈஸ்வரன் தலைமையில் முன்கூட்டியே குவிக்கப்பட்டிருந்த போலீசார் அதிரடியாக கல்லூரி கேட் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்ததனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.அப்பொழுது மாணவர்களை கல்லூரி வளாகத்திற்குள் எப்படி வந்து போலீசார் கைது செய்யலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் திருநெடுங்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் அப்பகுதியில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.