திருச்சி துவாக்குடி அருகே உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி (GPT )(1996-1999) ஆண்டு கல்லூரி மாணவர் 25 ஆண்டுகள் கழித்து சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. துவாக்குடி அருகே உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி (GPT )கல்லூரியில் சில்வர் ஜூப்ளி விழா முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்று ஆசிரியர் வரவழைத்து, அவர்களிடம் தாங்கள் கல்லூரியில் பயின்று அந்த கருத்துக்களை அடுத்ததாக பகிர்ந்து கொண்டனர்.தாங்கள் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறோம் என்று எடுத்துரைத்து, மேலும் தாங்கள் படித்த வகுப்பறையில் குடும்பத்துடன் மாணவர்களுடன் அமர்ந்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.
மேலும் அவர்கள் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு புத்தகங்களும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி முன்னாள் மாணவர் குடும்பத்துடன் ஒரு நாள் கல்லூரியில் மகிழ்ச்சியாக கொண்டாடினர்அனைவரும் ஒன்றாக அமர்ந்து கல்லூரி குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.