திருவெறும்பூர் ஒன்றியம் பத்தாளா பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14 வது கிளை மாநாடு!

- Advertisement -

0

திருச்சி புறநகர் மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் பத்தாளா பேட்டையில் 14 வது கிளை மாநாடு துவங்கப்பட்டது. மாநாட்டின் முதல் நிகழ்ச்சியானகொடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் .M. ஜெயசீலன் சங்கத்தின் கொடி ஏற்றி வைத்தார். கிளை மாநாட்டின் தமிழ்ச்செல்வன் ஒன்றிய குழு உறுப்பினர் தலைமையில் மறைந்த நமது கட்சித் தோழர்களுக்கும் பல இயற்கை சீற்றங்களால் இறந்தவர்களுக்கும் மாநாட்டு அரங்கில் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 14வது கிளை மாநாட்டை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் முருகேசன்,தோழர் கணேசன்,தோழர் தெய்வநிதி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தோழர் மகேந்திரன், தோழர் ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தோழர் மல்லிகா வாழ்த்துரை வழங்கினார்கள்.

- Advertisement -

வேலை அறிக்கை தோழர் ரத்தின பாண்டிய வாசித்து ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கிளைச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டது. ஒன்றிய மாநாட்டிற்கு ஐந்து பெண்கள் உட்பட 15 பேர்கள் தேர்வானார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் ஜெயசீலன் இன்றைய அரசியல் சூழ்நிலைகளையும், தோழர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், விவசாயிகள் படும் துயரத்தையும், விவசாய தொழிலாளர் படும் துயரத்தையும்,இரண்டு மாத காலமாக காவிரியில் தண்ணீர் வந்தும் விவசாயிகளுக்கு உய்யக்கொண்டான் வாய்க்காலிலும் ,கட்டளை வாய்க்காலிலும் சம்ப சாகுபடிக்கு தண்ணீர் வராத கண்டித்தும். விவசாய கூலித் தொழிலாளர் உடைய வேலை விவசாய காலங்களில் 12 விதமான வேலைகள் அழிந்து வருவதை கண்டித்தும் தீர்மானங்களை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார். மாநாட்டின் நிறைவாக கலந்து கொண்டு அனைத்து தோழர்களுக்கும் தோழர் கமலா நன்றி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.