திருவெறும்பூர் கல்லணை கால்வாயில் நேற்று அடித்து செல்லப்பட்ட பெல் ஊழியர் சடலமாக மீட்பு!

- Advertisement -

0

திருச்சி, திருவெறும்பூர் அருகில் உள்ள பத்தாளபேட்டை சேர்ந்த சுரேஷ். இவர் பெல் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று தனது இரு மகளுடன் பத்தாளபேட்டை பகுதி உள்ள கல்லணை கல்வாயில் குளிப்பதற்காக சுரேஷ் சென்றுள்ளார். கிருத்திகா கரையில் இருக்க மற்றொரு மகள் யாஷிகா குளிப்பதற்காக கால்வாய் இறங்கிய போது தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டது. தன் மகளை காப்பாற்றுவதற்காக சுரேஷ் தண்ணீரில் இறங்கிய போது அவரும் அடித்து செல்லப்பட்டார்.

- Advertisement -

இதை கண்ட மற்றொரு மகள் கிருத்திகா தனது தந்தையும் ,தங்கையும் தண்ணீர் அடித்து செல்லப்படுவதை பார்த்து கூச்சிலிட்டார். அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து கால்வாயில் இறங்கி தேடிய பார்த்தபோது யாஷிகாவை மீட்டு உடனடியாக பெல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்து யாஷிகா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம்  தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவருடன் சேர்ந்து பொதுமக்கள் உதவியுடன் கால்வாய் இறங்கி சுரேஷை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது கோவிலூரில் சுரேஷ் சடலம் கிடைத்ததாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக திருவெறும்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.