வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் திருவுருவப்படத்தை திறந்து வைத்து ஏழை மக்களுக்கு அன்னதானம்!

- Advertisement -

0

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவராக பதவி வகித்து வந்தவர் த.வெள்ளையன். கடந்த பல ஆண்டுகளாக வணிகர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருவதோடு, பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.கடந்த மாதம் வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையனுக்கு (72) திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். த.வெள்ளையன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர்,வியாபார பிரமுகர்கள் இரங்கலை தெரிவித்தனர்.

- Advertisement -

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளையன் திருவுருவப்படத்தை திறந்து வைத்து வருகின்றனர்.இந்நிலையில் திருச்சி காந்திமார்க்கெட்டில் பகுதியில் மாவட்ட தலைவர் எஸ்.பி. பாபு தலைமையில் வணிகர் காவலர் வெள்ளையன் திருவுருவப்படத்தை திறந்து வைத்து கொடியேற்றி வைத்து ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வியாபாரிகளின் சங்க தலைவர் கமலகண்ணன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.