4 தேசிய விருதுகளை அள்ளிய ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம்!

- Advertisement -

0

70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கினார்.தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன்-1’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்-1’ சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு ஆகிய பிரிகளில் தேசிய விருது வென்றுள்ளது.

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் தேசிய விருதினை பெற்றுக்கொண்டனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது 7வது தேசிய விருதாகும். ஏற்கனவே 1993, 1997, 2003, 2003, 2018, 2018 ஆகிய ஆண்டுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருதுகளை வென்றிருந்தார்.மேலும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன், சிறந்த நடன இயக்குநருக்கான விருதை சதீஷ் ஆகியோர் வென்றுள்ளனர். இவர்கள் ஜனாதிபதியிடம் தேசிய விருதை பெற்று கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.