திருவெறும்பூர் ஒன்றியம் கிழக்குறிச்சி ஊராட்சி நத்தமாடிப்பட்டியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைச்சர் திறந்து வைத்தார்…!
திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் திருவெறும்பூர் ஒன்றியம் கிழக்குறிச்சி ஊராட்சி நத்தமாடிப்பட்டியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் மற்றும் கணேஷ்நகரில் தார் சாலையை கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர் நரசிம்மன் ,ஸ்ரீதர், கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோஸ்பின் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர்மகேஷ் பொய்யாமொழி ஊராட்சி மன்ற தலைவி ஜோஸ்பின் ஜெயராஜ் வீட்டில் அவரது மகனுக்கு ஞானஸ்தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.