ஏரல் கடை வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்தது. இதையொட்டி கடந்த மாதம் 26-ந்தேதி ஏரல் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கோபால் தலைமையில் ஏரல் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் கடைவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்து தரப்படும் என்றும், தொடர்ந்து 15 நாட்களுக்குள் வியாபாரிகள்தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஏரல் தாசில்தார் கோபால், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், சிறுத்தொண்டநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி இளமதி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலையில் கடைவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யும் பணி தொடங்கியது.ஏரல் பாரதியார் ரோடு, சினிமா தியேட்டர் அருகில் உள்ள இடங்களில் உள்ள கடைகளில் அளவீடு செய்யப்பட்டது.. மேலும் அளவீடு செய்து கொடுக்கப்பட்ட 15 நாட்களுக்குள் வியாபாரிகள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அவ்வாறு அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும் என அதிகாரிகள் வியாபாரிகளிடம் தெரிவித்தனர்.