இலக்கியத்திற்கான  நோபல் பரிசு பெறும் முதல் தென்கொரியாவின் முதல் எழுத்தாளர்!

- Advertisement -

0

தென் கொரிய எழுத்தாளர் ஹான் கேங்குக்கு இந்த வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெறும் தென்கொரி யாவின் முதல் எழுத்தாளர் என்ற பெருமையை ஹான் கேங் பெற்றுள்ளார். இவர், தன் கவிதைகளை 1993ல் வெளியிட்டு இலக்கியத் துறைக்குள் வந்தார். இவரது, ‘வெஜிடேரியன்’ என்ற நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பரவலாக வரவேற்பை பெற்றது.இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் மனிதகுலத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப் படுகிறது. ஸ்வீடிஷ் தொழிலதிபரும் விஞ்ஞானியுமான ஆல்பிரட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு உலகின் மிகவும் மதிப்புமிக்க பரிசுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த வகையில் தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு நடப்பு ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கை யைப் பற்றிய கவிதைக்காக ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கா வை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ் ,கேரி ரூவ்கன்,இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஜே.ஹாப்ஃபீல்டு ,ஜெஃப்ரி இ.ஹிண்டன் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் எம்.ஜம்பர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

 

 

Leave A Reply

Your email address will not be published.