திருச்சி ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் வரும் செப் 27ஆம் தேதி முதல் புத்தக கண்காட்சி திருவிழா தொடங்கி அக் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது, இந்த கண்காட்சி அமைப்பதற்கான பணிகள் ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த கண்காட்சியில் கல்லூரி,பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காகவும், புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதற்கான விழிப்புணர்வு பேரணி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானம் வரை சென்று நிறைவடைந்தது இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.