திருச்சி மாவட்டத்தில் சர்வதேச சாரண,சாரணியர் இயக்க வைரவிழா:அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வரும் ஜனவரி மாதம் 25 ம் அன்று பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்கலிருந்து சாரணர்கள் கலந்து கொள்கிறனார். ஏழு நாட்கள் நடைபெறும் இம்முகாமிற்கான தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சி விழாக்குழு தலைவராக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துணைத்தலைவராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமிற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் சென்று ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் கலந்து கொள்ள பன்னாடுகளில் இருந்து வருகை தரும் சாரணர்கள் மற்றும் சாரணியர்களுக்கான அடிப்படை வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுனார்.
இவருடன் மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்சமது, பழனியாண்டி, சாரண இயக்கம் முதன்மை ஆணையர் அறிவொளி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.