வலியில்லாமல் இறப்பதற்கு சூசைட் பாட் தீர்மானித்த தம்பதியினர்…!

- Advertisement -

0

தற்கொலை நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிற இந்த நிலையில், விருப்பப்பட்டு தன்னுடைய இறப்பை தானே தீர்மானிக்கும் வகையில் வலியில்லாமல் இறப்பதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனம் சூசைட் பாட் ஒன்றை தயாரித்து இருக்கிறது.இந்த சூசைட் பாடில் இறப்பதற்கு ஒரு பிரிட்டிஷ் தம்பதி முன்வந்துள்ளனர்.இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களது கடைசி தருணத்தை ஒன்றாக செலவிடமுடியும் என நினைத்துள்ளனர்.  வயது முதிர்ந்த தம்பதி ஒன்றாக வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

பிரிட்டினை சேர்ந்த தம்பதி பீட்டர் ஸ்காட் (வயது 86), அவரது மனைவியான கிறிஸ்டைன் (வயது 80) ஓய்வு பெற்ற செவிலியர். இவர்கள் 46 ஆண்டுகள் திருமண உறவில் மகிழ்ச்சியாக கழித்துள்ளனர். கிறிஸ்டைனுக்கு டிமன்ஷியா நோய் இருப்பது ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், தன் மனைவி இல்லாத வாழ்க்கையை கொஞ்சமும் நினைத்து பார்க்க முடியாமல் இந்த முடிவிற்கு இருவரும் வந்துள்ளனர்.இதனால் இவர்கள் சுவிட்சர்லாந்து சென்று அந்த சூசைட் பாடில் தங்களில் உயிரை மாய்த்துக் கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக இந்த தம்பதி தங்களது கடைசி காலத்தை ஆல்ப்ஸ் மலையில் வாக்கிங் செல்லவும், சுவையான மீன் உணவை சாப்பிடவும் முடிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.