மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா!

- Advertisement -

0

திருச்சி கலையரங்கில் இன்று  நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சியில் சான்றிதழ்களை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினர்.

- Advertisement -

விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், மண்டல தலைவர்கள், மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்க துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார். விழாவில் மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மாமன்ற உறுப்பினர் விஜயஜெயராஜ், அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் துரைராஜ், காஜாமலை பகுதி திமுக செயலாளர் காஜாமலை விஜய், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.