திருச்சி புத்தூர் அருகே டிபன் கடையில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரே ஜெய்லானி டிபன் கடைகள் இயங்கி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வருவோரை கவரும் விதமாக இங்கு விதவிதமான உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள ஒரு டிபன் கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.பின்னர் அந்த தீ மளமளவென கொளுந்துவிட்டு எரியத் துவங்கியது.
உடனே அருகில் அருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலிறிந்து விரைந்து வந்த கண்டேன்மென்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஷ் தலைமையில், உதவி மாவட்ட அலுவலர் சத்யவர்த்தனன் மற்றும் தீயணைப்பு மீட்பு வீரர்கள் இரண்டு தீயணைப்பு வாகன உதவியுடன் அரை மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அளித்தனர். இதனால் மற்ற கடைகளுக்கு தீவிபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டது.இந்த தீவிபத்தில் டிபன் கடையில் இருந்த தளவாட சாமான்கள் மற்றும் டேபிள் சேர் என ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த டிபன் கடையின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறிப்பட்டு அதிலிருந்து ஏற்பட்ட தீ கடைக்கு பரவி இந்த தீவிபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.