திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழ் ஆளுமை விருதுகள் வழங்கும் விழா தமிழ் சங்க அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் கவிஞர் கோவிந்தசாமி வரவேற்புரையாற்றினார். தலைவர் ஜவஹர் ஆறுமுகம் துவக்க உரையாற்றினார். பொருளாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார்.திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார். பத்மஸ்ரீ சுப்புராமன், திருக்குறள் முருகானந்தம், வையம்பட்டி ஊராட்சி தலைவர் சூர்யா சுப்பிரமணியன், கவிஞர் இந்திரஜித், கவிஞர் மணமேடு குருநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மயான பூமியில் மனைவி, மகளுடன் ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்துவருவது மட்டுமின்றி, அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம் வைத்துள்ளதைப் பாராட்டி ஏபிசி மருத்துவமனை மூளை நரம்பியல் நிபுணர் மருத்துவர் அலீம் தமிழ் ஆளுமை 2004 விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.