தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு இந்த மாதம் நடைபெறும் என்று சொல்லப்பட்ட நிலையில் அடுத்த அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்நிலையில், தற்போது திருச்சி மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள தவெக போஸ்டர் வைரலாகி வருகிறது. அதில், “தமிழக அரசியலில் மூன்றெழுத்தின் ஈ.வெ.ரா, அண்ணா, எம்.ஜி.ஆரின் அடுத்த அரசியல் வாரிசே” என விஜய் பெயரை குறிப்பிட்டு போஸ்டர் விஜய் ரசிகர் மன்ற முன்னாள் பொறுப்பாளர் ராஜா மாவட்டம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி தற்பொழுது கட்சியில் உள்ள நிர்வாகிகளை திகைக்க வைத்துள்ளார்.கட்சி பொறுப்பாளர்கள் இருக்கும் பொழுது முன்னாள் பொறுப்பாளர் முந்திக்கொண்டு போஸ்டரை திருச்சியில் அடித்து ஒட்டி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார் என த. வெ. க கட்சி தொண்டர்கள் பேசி வருகின்றனர்.