தமிழக வெற்றி கழகத்தின் கொடியை இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலகத்தில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிமுகபடுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்துத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் உறுதி மொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கொடியில் இரு போர் யானைகளுடன், வாகை மலருடன் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கொடி வடிவமைக்கப்பட்டடு இருந்தது.
அவர் எடுத்த உறுதி மொழியில் நாட்டின் விடுதலைக்காகவும் , மக்களின் உரிமைக்காகவும் போராடி உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன் என்றும், தமிழ் மொழிக்காக உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றுவேன் என்றும்,சாதி, மத, இனம், பிறந்த இடம் உள்ள வேற்றுமைகளை களைந்து அனைவரும் ஒன்று என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்று உறுதிமொழி எடுத்தார்.இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா சந்திரசேகர், மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.