திருச்சி மாவட்டம் முசிறி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக சுரேஷ்குமார் பொறுப்பேற்றார். இதற்கு முன் இப்பணியில் இருந்த யாஸ்மின் சென்னைக்கு பணி மாறுதலில் சென்றுள்ளார் வேதாரண்யம் பகுதியில் டி எஸ் பி ஆக பணிபுரிந்த சுரேஷ்குமார் பணி மாறுதலில் முசிறியில் பொறுப்பேற்றார். மரியாதை நிமித்தம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் காவல்துறை அலுவலர்கள் சுரேஷ் குமார்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.