சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு எண் 191 சார்பாக தூய்மையே சேவை திட்டத்தில் சுரண்டை நகராட்சி பசுமை வளம் மீட்பு பூங்கா வளாகத்தில் உள்ள நுண்உரக் குடிலில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் நெகிழி தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. காமராஜர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு எண்:191-ன் திட்ட அலுவலர் முனைவர்.ரா.வீரபத்திரன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் திருமதி.ரா.ஜெயா தலைமையுரை ஆற்றினார். இயற்பியல் துறைத்தலைவர் முனைவர்.சா.ராபின்சன் ஜேபஸ் மற்றும் பொருளியல் துறைத்தலைவர் முனைவர். பா.செல்வ கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திசையன்விளை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி முதுகலை வரலாறு ஆசிரியர் ஜெ.அதிசய ராஜ் சிறப்புரை ஆற்றினார். பி.எஸ்.சி.கணிதம் இரண்டாமாண்டு மாணவி ஆ.கலையரசி வாழ்த்துரை வழங்கி தூய்மையே சேவை பற்றிய உறுதிமொழி வாசித்தார். தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் த.சங்கீதா மற்றும் சுரண்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் கா.மகேஸ்வரன் ஆகியோர் தூய்மையே சேவை திட்டம் பற்றியும் நெகிழி தடுப்பு விழிப்புணர்வு குறித்தும் சிறப்புரை ஆற்றினார்கள். பி.எஸ்.சி.கணினி அறிவியல் சுழற்சி2-ல் முதலாமாண்டு பயிலும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவன் கே.முத்துக்குமார் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவு பெற்றது.