எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…!
எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மின்சார கட்டண உயர்வை கண்டித்தும், மாதம் ஒருமுறை மின்கணக்கீடு என்ற தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்த கோரி மாவட்ட செயலாளர் தளபதி அப்பாஸ் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி,பொது செயலாளர் முகமது சித்திக் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜீத் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் ஃபாதர்.மார்க் மற்றும் மாநில பேச்சாளர் K.முபாரக் அலி ஆகியோர்கள் மின்கட்டண உயர்வை கண்டித்தும் மாதம் ஒருமுறை மின்கட்டணம் என்ற தேர்தல் வாக்குறுதியை உடனடியாக அமல்படுத்த வேண்டிய கண்டன உரையாற்றினார்கள்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னகர் ரபீக் மற்றும் கிழக்கு தொகுதி தலைவர் I. சபியுல்லா ஆகியோர்கள் கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.இந் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் மதர்.Y. ஜமால் முகம்மது அவர்கள் தொகுத்து வழங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் எஸ் எஸ் ரஹமத்துல்லா, திருவெறும்பூர் தொகுதி தலைவர் Er.I. ஷேக் முகமது,வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் MAJ.சாதிக் பாஷா, SDTU தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் மீரான் மைதீன்,SDTU மாவட்ட செயலாளர் சக்கரை மீரான்,காஜா மொய்யூனுதீன்,தொகுதிஅணி,கிளை உள்ளிட்ட நிர்வாகிகள், பொது மக்கள் கலந்துக் கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.இறுதியாக மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.