காவிரி ஆற்றில் இறங்கி ஆய்வு செய்யும் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ..!

- Advertisement -

0

திருச்சி காவிரி நீர் புதுவாத்தலை மற்றும் ராமாவா்த்தலை ஆகிய 2 வாய்க்கால்கள் வழியாக ஸ்ரீரங்கம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.இந்த வாய்க்கால்கள் தற்போது ஆகாயத்தாமரை மற்றும் செடி கொடிகள் மண்டி வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல். இதனால் இப்பகுதி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்வது காலதாமதம் ஆகி வருகிறது. இதனை அடுத்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியை நேரில் சந்தித்து வாய்க்காலை தூர்வார கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

இதனையடுத்து உடனடியாக நீர்வளத்துறை அலுவலகத்திற்கு விவசாயிகளுடன் நேரில் சென்ற பழனியாண்டி எம்.எல்.ஏ அங்கிருந்த செயற்பொறியாளர் நித்தியானந்தத்தை சந்தித்து கரையை பலப்படுத்தவும், காவிரி ஆற்றில் குறம்பு தேக்கி வாய்க்கால்களில் தண்ணீரின் அளவை அதிகப்படுத்த கோரிக்கை மனு அளித்தார்.இதனை தொடர்ந்து அதிகாரிகள் காவிரி ஆற்றில் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் மணல் மூட்டைகளுடன் பணியில் ஈடுபட்டனர். இந்த வேளையில் அங்கு சென்ற பழனியாண்டி எம்.எல்.ஏ. யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று ஆற்றுக்குள் இறங்கினார். ஆற்று தண்ணீரின் அளவை கண்டு,அதற்கு ஏற்றார் போல் கரையின் உயரத்தை உயர்த்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். எம்.எல்.ஏ. வின் இந்த நடவடிக்கையை  அந்த பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.