ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு பணிகளைக் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ஆலோசனை…
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வருகின்ற 30 ம் தேதி தொடங்கி ஜனவரி 20 ம் தேதி நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளைக் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் இன்று கோயில் வளாகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி டிக்கெட் வழங்குவது தொடர்பான மேற்கொள்ள வேண்டிய பணிகளை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், மாநகர காவல் ஆணையர் காமினி, துணை ஆணையர் செல்வகுமார், திருக்கோவில் இணை ஆணையர் மாரியப்பன், வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள், இந்து சமய துறை அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் துறை அலுவலர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.