திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் கிராமத்தில் அருள்புரியும் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலய (தேரடி முருகன்) தமிழ் முறைப்படி திருக்குட நன்னீராட்டு விழாவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மூன்று கால பூஜைகள் தமிழ் முறைப்படி நடைபெற்று, யாகசாலை அமைத்து கலசங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வேத மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்ட குடங்களில் இருந்து நீரை கோபு கலசத்திற்கு தமிழ் முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாதி தரிசனம் செய்தனர்