செயிண்ட் ஜோன் ஆப் அர்க் இன்டர்நேஷனல் பள்ளி விளையாட்டு போட்டியில் 100மீட்டர் கார் இழுத்து மாணவி சாதனை…!
திருச்சி செயிண்ட் ஜோன் ஆப் அர்க் இன்டர்நேஷனல் பள்ளியின் பதினெட்டாவது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஜீயபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலச்சந்தர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
விளையாட்டு விழாவில் யஸ்வந்திக்கா என்னும் பன்னிரண்டாம் வகுப்பு கராத்தே மாணவி 100 மீட்டர் ஆம்னி கார் இழுத்து சாதனை புரிந்தார்.நிகழ்ச்சியில் மேனேஜிங் டிரஸ்டி ஆனந்த், தாளாளர்கள் சந்திரசேகரன், நாகவேணிசந்திரசேகரன், முதன்மை முதல்வர் ரவிராயன், முதல்வர் ஜெயந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.